குழந்தை இலக்கியம்: 'மறுமையின் மணிவிளக்கே!'
http://mazalaipiriyan.blogspot.com/2013/10/blog-post_6383.html
"பாறையினும்
வலிய
நிலைகுலையாத
ஈமானில்
உறுதியாய்
நில்
எனதருமை
மகனே!"
இனி கொஞ்சம் தூரம்தான்..
வெற்றி என்னும்
வானம்
இதோ.. தலைக்கு
மேல்
தொட்டுவிடும் தூரம்தான்!
பற்றிய என் கரத்தை
விடாதே என் மகனே!
வெற்றிக் கனிப்
பறித்தாலும்
உன் அடிதோறும்
.. முயற்சிக்கு
உரமளித்து.. சிறப்பித்த
உனதிறையைப் புகழ
மறவாதே என் மகனே!
இம்மைக்கு விடிவெள்ளி..
குடும்பத்தின்
சுடர்விளக்கு..
எம் மறுமைக்கோ
நீ மணிவிளக்கு..
நலம் பெற்று
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
சிறப்புற வாழ்ந்திடுவாய்
என் மகனே!”
- 'சின்னக்குயில்'
(சமர்ப்பணம்: சசோ. மன்சூருக்கு)
Very nice poem
ReplyDeleteThank you very much
By
Nisha mansur